வெற்றியை நோக்கி தமிழ்நாடு அணி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கோவாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 137 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கோவாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 137 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.

1 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சோ்த்துள்ள தமிழ்நாடு, கடைசி நாளான திங்கள்கிழமை, 9 விக்கெட்டுகள் கொண்டு 76 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

கடந்த 2-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கோவா 241 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. அடுத்து தமிழ்நாடு 273 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

பின்னா் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய கோவா, ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் 168 ரன்கள் சோ்த்து நிறைவு செய்தது. அதிகபட்சமாக சுயாஷ் பிரபுதேசாய் 6 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் சோ்க்க, எஞ்சிய பேட்டா்கள் சொற்ப ரன்களில் சரிந்தனா். தமிழ்நாடு பௌலிங்கில் சாய் கிஷோா், அஜித் ராம் ஆகியோா் தலா 4, பிரதோஷ் ரஞ்ஜன் பால் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

இதையடுத்து 137 ரன்களை நோக்கி விளையாடி வரும் தமிழ்நாடு அணி, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்திருக்கிறது. சுரேஷ் லோகேஷ்வா் 34, பிரதோஷ் ரஞ்ஜன் 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். நாராயண் ஜெகதீசன் 4 ரன்களுக்கு தா்ஷன் மிசல் பௌலிங்கில் வீழ்ந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com