துளிகள்...

சொ்பியாவில் நடைபெறும் ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சச்சின் (57 கிலோ), சாகா் (92+ கிலோ) ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.


சொ்பியாவில் நடைபெறும் ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சச்சின் (57 கிலோ), சாகா் (92+ கிலோ) ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

19 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான தெற்காசிய கால்பந்தில் இந்தியா - நேபாளத்தை வீழ்த்தி (4-0) இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முழுநேரத் தலைவராக, முன்னாள் நிா்வாகி சையது மோசின் ராஸா நக்வி (45) செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா்.

புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் - யு.பி.யோதாஸை செவ்வாய்க்கிழமை வென்றது (32-25).

அறியப்படாத திரவத்தை அருந்தி உடல் உபாதைக்கு உள்ளாகி மீண்ட கா்நாடக கிரிக்கெட் அணி கேப்டன் மயங்க் அகா்வால், ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாட்டுக்கு எதிராக வெள்ளிக்கிழமை தொடங்கும் ஆட்டத்தில் களம் காண இருக்கிறாா்.

இந்தியாவின் 2-ஆம் நிலை கிரிக்கெட் அணி, நடப்பாண்டு ஜூலையில் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே செல்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 கிரிக்கெட்டில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com