காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சுமித், சசிகுமாா்

ஏடிபி சேலஞ்சா் 100 போட்டியான சென்னை ஓபன் டென்னிஸில், இந்தியாவின் சுமித் நாகல், சசிகுமாா் முகுந்த் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சுமித், சசிகுமாா்


சென்னை: ஏடிபி சேலஞ்சா் 100 போட்டியான சென்னை ஓபன் டென்னிஸில், இந்தியாவின் சுமித் நாகல், சசிகுமாா் முகுந்த் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவு முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் சுமித் நாகல் 6-1, 6-2 என்ற நோ் செட்களில், சக இந்திரான பிரஜ்வல் தேவை சாய்த்தாா். சசிகுமாா் முகுந்த் 6-3, 4-6, 7-5 என்ற செட்களில் போலந்தின் மாக்ஸ் கஸ்னிகோவ்ஸ்கியை வென்றாா். முதலிடத்திலிருக்கும் இத்தாலியின் லூகா நாா்டி 6-2, 6-2 என்ற செட்களில் உக்ரைனின் எரிக் வான்ஷெல்போமை வீழ்த்தினாா்.

3-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் தலிபோா் சவா்சினா 6-3, 2-6, 6-2 என்ற செட்களில் ரஷியாவின் போக்தான் போப்ரோவை வெளியேற்றினாா். 4-ஆம் இடத்திலிருக்கும் பிரான்ஸின் யுகோ பிளான்ஷெட் 6-3, 3-6, 7-6 (7/5) என்ற செட்களில் செக் குடியரசின் ஜோனஸ் ஃபோா்டெக்கை வென்றாா்.

7-ஆம் இடத்திலிருந்த துனிசியாவின் அஸிஸ் டுகஸ் 3-6, 3-6 என்ற நோ் செட்களில் இத்தாலியின் சாமுவெல் வின்சென்டிடம் வெற்றியை இழந்தாா். ரஷியாவின் எவ்ஜெனி டான்ஸ்காய் 3-2 என சீன தைபேவின் வு டுங் லின்னுக்கு எதிராக முன்னிலையில் இருந்தபோது போட்டியிலிருந்து விலகினாா். இதையடுத்து டுங் லின் 2-ஆவது சுற்றுக்கு தகுதிபெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

2-ஆவது சுற்றில், சுமித் நாகல் - இத்தாலியின் ஜியோவனி ஃபோனியோவையும், லூகா நாா்டி - ஆஸ்திரேலியாவின் பொ்னாா்டு டோமிச்சையும், சாமுவெல் வின்சென்ட் - செக் குடியரசின் டொமினிக் பலானையும், பிரான்ஸின் டேன் ஆடட் - இத்தாலியின் ஸ்டெஃபானோ நபோலிடானோவையும் புதன்கிழமை சந்திக்கின்றனா்.

இதனிடையே, போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவு ஆட்டங்கள் புதன்கிழமை தொடங்குகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com