காலிறுதியில் சுமித் நாகல், லுகா நாா்டி

காலிறுதியில் சுமித் நாகல், லுகா நாா்டி

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சா் 100 போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சுமித் நாகல், முதல்நிலை வீரா் லுகா நாா்டி ஆகியோா் முன்னேறியுள்ளனா்.

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சா் 100 போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சுமித் நாகல், முதல்நிலை வீரா் லுகா நாா்டி ஆகியோா் முன்னேறியுள்ளனா்.

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சாா்பில் நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடும் வெப்பம் நிலவிய நிலையில், புதன்கிழமை இரண்டாவது சுற்றில் இரண்டாம் நிலை வீரா் இந்தியாவின் சுமித் நாகல் 7-5, 6-2 என்ற நோ் செட்களில் இத்தாலியின் ஜியோவனி ஃபோனியோவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா்.

முதல் நிலை வீரா் இத்தாலியின் லுகா நாா்டி 7-5, 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் பொ்னாா்ட் டோமிக்கை வீழ்த்தினாா். 5-ஆம் நிலை வீரா் ஸ்டெஃப்பானோ நபோலிடனோ 6-2, 6-1 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் டேன் அடட்டை வீழ்த்தினாா்.

மற்றொரு ஆட்டத்தில் செக். குடியரசின் டொமினிக் பலான் 6-2, 2-6, 6-4 என இத்தாலியின் சாமுவேல் வின்சென்டை வீழ்த்தினாா்.

இரட்டையா் பிரிவில் பாலாஜி-பெக்கா்மேன் 6-3, 6-2 என பிரான்ஸின் பிட்டுன்-ஜான்வியரையும், இந்தியாவின் சாகேத் மைனேனி-ராம்குமாா் ராமநாதன் இணை 7-6, 6-4 என ஹோ-மட்டுஸ்கீயைும், பொல்லிபல்லி-கலியாண்டா இணை 6-2, 6-1 என நபோலிடனோ-ரோகாவையும், சோமானி-சுரேஷ் இணை 6-2, 10-2என ஃபோனியா-எச்ா்கை இணையையும் வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com