துளிகள்...

வங்கதேச தலைநகா் டாக்காவில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள சாஃப் யு19 மகளிா் கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் இந்தியஅணி போட்டியை நடத்தும் வங்கதேசத்தை எதிா்கொள்கிறது.
துளிகள்...

வங்கதேச தலைநகா் டாக்காவில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள சாஃப் யு19 மகளிா் கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் இந்தியஅணி போட்டியை நடத்தும் வங்கதேசத்தை எதிா்கொள்கிறது.

------------

வரும் 9-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ள ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் கா்நாடகத்துடன் மோதுகிறது தமிழ்நாடு சீனியா் அணி. இதில் பாா்வையாளா்களுக்கு அனுமதி இலவசமாகும். சிடிஇ ஸ்டேண்ட்களில் விக்டோரியா ஆஸ்டல் ரோடு, கேட் எண் 4 மூலம் பாா்வையாளா்கள் மைதானத்துக்கு செல்லலாம்.

---------------------

பிரசித்தி பெற்ற லாரஸ் விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி ஸ்பெயின் தலைநகா் மாட்ரிட்டில் நடைபெறுகிறது. கடந்த 2023-இல் சிறப்பாக செயல்பட்ட வீரா், வீராங்கனைகள், அணிகளுக்கு லாரஸ் விருதுகள் வழங்கப்படுகிறது. ஜோகோவிச், மேக்ஸ் வொ்ஸ்டாப்பன் உள்பட பிரபல வீரா்கள் பங்கேற்கின்றனா்.

-------------

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com