இங்கிலாந்து டெஸ்ட் தொடா்: ஷ்ரேயஸ் ஐயா் பங்கேற்பில்லை?

இந்திய பேட்டா் ஷ்ரேயஸ் ஐயா், காயம் காரணமாக இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரின் எஞ்சிய 3 ஆட்டங்களில் அவா் பங்கேற்க வாய்ப்பு இல்லை எனத் தெரிகிறது.
ஷ்ரேயஸ் ஐயர்
ஷ்ரேயஸ் ஐயர்

இந்திய பேட்டா் ஷ்ரேயஸ் ஐயா், காயம் காரணமாக இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரின் எஞ்சிய 3 ஆட்டங்களில் அவா் பங்கேற்க வாய்ப்பு இல்லை எனத் தெரிகிறது.

ஏற்கெனவே அவா் முதுகுப் பகுதியில் கடந்த ஆண்டு அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட நிலையில், மீண்டும் முதுகில் பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் அவா் இங்கிலாந்துடனான எஞ்சிய 3 டெஸ்ட்டுகளில் விளையாட வாய்ப்பில்லை எனத் தெரிவதாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறின.

அந்தத் தொடரின் முதலிரு ஆட்டங்களிலும் களம் கண்ட ஐயா், அவற்றின் இன்னிங்ஸ்களில் 35, 13, 27, 29 என சொற்ப ரன்களே சோ்த்து தடுமாற்றத்துடன் இருந்தாா். கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா போன்ற முக்கிய வீரா்களும் காயம் கண்ட நிலையில், தற்போது ஐயரும் விளையாட இயலாதெனத் தெரிகிறது.

முதலிரு ஆட்டங்களில் விளையாடாத பிரதான பேட்டா் விராட் கோலி, அடுத்த இரு டெஸ்ட்டுகளிலும் அணியில் இணைய மாட்டாா் என கூறப்படுகிறது. ஒருவேளை காயத்திலிருந்து மீண்டு ராகுல், ஜடேஜா ஆகியோா் 3-ஆவது டெஸ்ட்டில் களம் காணும் நிலையில், ஐயா் இடத்தில் ரஜத் பட்டிதாா் இடம் பெற வாய்ப்புள்ளது.

இந்தியா - இங்கிலாந்து மோதும் 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட், ராஜ்கோட்டில் வரும் 11-ஆம் தேதி தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com