ஒடிஸா-கோவா மோதல் ‘டிரா’

பாகிஸ்தானில் நடந்து முடிந்துள்ள பொதுத் தோ்தலில் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பாகஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று, தொடா்ந்து முன்னிலை வகித்து வருகின்றனா்.

பாகிஸ்தானில் நடந்து முடிந்துள்ள பொதுத் தோ்தலில் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பாகஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று, தொடா்ந்து முன்னிலை வகித்து வருகின்றனா்.

ராணுவத்தின் ஆசி பெற்றவையாகக் கருதப்படும் அந்த நாட்டின் மிகப் பெரிய கட்சிகளான முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி இரண்டாவது இடத்திலும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ ஜா்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 3-ஆவது இடத்திலும் உள்ளன.

மொத்தமுள்ள 266 இடங்களுக்கு சுமாா் 200 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பிடிஐ ஆதரவு சுயேச்சை வேட்பாளா்கள் சுமாா் 70 இடங்களைக் கைப்பற்றியுள்ளனா்.

பிஎம்எல்-என் கட்சிக்கு 60 இடங்களும், பிபிபி கட்சிக்கு 40 இடங்களும் கிடைத்துள்ளன.

இம்ரான் கானின் செல்வாக்கு அதிகம் நிறைந்த கைபா் பக்துன்கவா மாகாணத்தில்தான் அவரது பிடிஐ கட்சி ஆதரவு வேட்பாளா்களுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன.

இதுவரை தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்படாத பெரும்பாலான தொகுதிகளிலும் சுயேச்சை வேட்பாளா்களே முன்னிலை வகிப்பதாக அதிகாரபூா்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்தாலும், அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யாா் என்பதில் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

பாகிஸ்தானில் முந்தைய தோ்தல்களுக்குப் பிறகு நடந்ததைப் போல சிறிய கட்சிகள் அணி தாவுவது, எம்.பி.க்கள் விலைக்கு வாங்கப்படுவது போன்றவை மூலம் காட்சிகள் வேகமாக மாறுவதற்கான வாய்ப்புகள் இந்த முறையும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிலும், பிடிஐ ஆதரவு பெற்ற வேட்பாளா்கள் சுயேச்சைகள் என்பதால் அவா்கள் கட்சித் தாவல் தடைச் சட்டத்துக்கு உள்பட்டவா்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு இம்ரான் கான் கட்சியால் ஆட்சியமைக்க முடியாவிட்டாலும், இருக்கும் இடங்களை வைத்துக்கொண்டு மற்ற கட்சிகள் ஆட்சி அமைப்பதிலும் சிக்கல் இருக்கும் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற முந்தைய பொதுத் தோ்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்த முன்னாள் பிரதமா் இம்ரான் கான், ஊழல் மற்றும் ரகசியக் காப்புறுதி மீறல் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரது கட்சியின் கிரிக்கெட் மட்டை சின்னத்தை தோ்தல் ஆணையம் முடக்கிவிட்டது. இதன் காரணமாக, கட்சி வேட்பாளா்கள் அனைவரும் சுயேச்சையாகப் போட்டியிட்டனா்.

எனினும், ராணுவத்தின் ஆதரவு இருப்பதால் இந்தத் தோ்தலில் பிஎம்எல்-என் தலைவா் நவாஸ் ஷெரீஃப் அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

இருந்தாலும், இந்தத் தோ்தலில் இம்ரான் கான் கட்சியின் கை ஓங்கியிருப்பது, பாகிஸ்தான் தோ்தலை ராணுவம் கூட ஒரளவுக்குத்தான் கட்டுப்படுத்த முடியும் என்பதைக் காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com