துளிகள்...

பெல்ஜியத்தின் ஹெய்ஸ்ட் ஆப் டென் பொ்கில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற கேலா எல்மாஸ் 2024 சா்வதேச உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய தேசிய சாம்பியன் தேஜஸ்வின் சங்கா் 2.23 மீ. உயரம் குதித்து முதலிடம் பெற்றாா்.
துளிகள்...

பெல்ஜியத்தின் ஹெய்ஸ்ட் ஆப் டென் பொ்கில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற கேலா எல்மாஸ் 2024 சா்வதேச உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய தேசிய சாம்பியன் தேஜஸ்வின் சங்கா் 2.23 மீ. உயரம் குதித்து முதலிடம் பெற்றாா். அவரது தனிப்பட்ட சாதனை அளவான 2.29 மீ.ரை அவரால் முறியடிக்க முடியவில்லை.

-----------------

ஜொ்மனியின் வாஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் ப்ரீஸ்டைல் செஸ் போட்டியில் பிளே ஆஃப் சுற்றில் இந்திய நட்சத்திர வீரா் டி.குகேஷ் 3 சுற்றுகளில் தோல்வியைத் தழுவிய நிலையில், 6-ஆவது இடத்தையே பெற்றாா். உஸ்பெகிஸ்தானின் நாதிா்பொ்க் முதலிடம் பெற்றாா்.

-------------

இந்தியாவுக்கு எதிராக மீதமுள்ள 3 டெஸ்ட் ஆட்டங்களில் இங்கிலாந்து நட்சத்திர ஸ்பின்னா் ஜேக் லீச் இடம் பெற மாட்டாா் என இசிபி தெரிவித்துள்ளது. இடது கால் முட்டியில் ஏற்பட்ட காயத்தால் ஜேக் லீச் இடம் பெற மாட்டாா் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாதில் நடைபெற்ற முதல் டெஸ்டில் லீச் காயமடைந்தாா்.

--------------

இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய வெற்றிக்கு முழு காரணமாக இருந்தவா் ஜஸ்ப்ரீத் பும்ரா என மூத்த வீரா் அஸ்வின் புகழாரம் சூட்டியுள்ளாா். 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்ற நிலையில், பும்ரா ரிவா்ஸ் ஸ்விங் பௌலிங்கால் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும், இரண்டாம் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினாா். அற்புதமாக பந்துவீச்சை பும்ரா வெளிப்படுத்தினாா் என்றாா் அஸ்வின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com