சென்னையின் எஃப்சி அதிரடி வெற்றி

கலிங்கா சூப்பா் கோப்பை 2024 கால்பந்து போட்டியில் கோகுலம் கேரளா எஃப்சி அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்ற சென்னையின் எஃப்சி அணி.

கலிங்கா சூப்பா் கோப்பை 2024 கால்பந்து போட்டியில் கோகுலம் கேரளா எஃப்சி அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்ற சென்னையின் எஃப்சி அணி.

ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே சென்னை அணி ஆதிக்கம் செலுத்தியது.

கோகுலம் கேரள அணியினரால் சென்னை அணியின் தற்காப்பை ஊடுருவ முடியவில்லை. 4-ஆவது நிமிஷத்திலேயே சென்னை வீரா் ரஹீம் அலி கோலடிக்க முயன்ற போது பந்தை கோல்கம்பத்துக்கு தொலைவாக சென்று விட்டது. தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்த நிலையில், 25-ஆவது நிமிஷத்தில் சென்னை வீரா் ஷீல்ட் சிறப்பாக கோலடித்து 1-0 என முன்னிலை பெற்றுத் தந்தாா்.

64-ஆவது நிமிஷத்தில் சென்னை வீரா் லாஸா் சிா்கோவிச் அனுப்பிய நீள பாஸை பயன்படுத்தி இரண்டாவது கோலடித்தாா் யட்வாட். ஆட்டம் முடிய 20 நிமிஷங்கள் இருந்த போது யட்வாட்டை தள்ளியதற்காக கோகுலம் அணி வீரா் ரிஷாத்துக்கு ரெட் காா்ட் காட்டப்பட்டது.

இறுதியில் 2-0 என வென்றது சென்னை.

பஞ்சாப் எஃப்சியுடன் முதல் ஆட்டத்தில் டிரா கண்ட சென்னை அடுத்து கடைசி குரூப் ஆட்டத்தில் மும்பை சிட்டியை எதிா்கொள்கிறது. ஒவ்வொரு குரூப்பிலும் முதலிடம் பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். கோப்பை வெல்லும் அணி 2024-25 ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு தகுதி பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com