கேலோ இந்தியா கபடி:ஹரியாணா வெற்றி

கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டு போட்டி கபடியில் ஹரியாணா அணிகள் தொடக்க ஆட்டங்களில் வெற்றி பெற்றன.

கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டு போட்டி கபடியில் ஹரியாணா அணிகள் தொடக்க ஆட்டங்களில் வெற்றி பெற்றன.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் 6-ஆவது கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் நடைபெறுகின்றன.

இதையொட்டி ஆடவா், மகளிா் கபடி போட்டி வியாழக்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் தொடங்கியது. 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆட்டங்கள் நடைபெற்றன.

மகளிா் கபடியில் தமிழகத்தை 41-20 என்ற புள்ளிக்கணக்கில் ஹரியாணா வென்றது. மற்றொரு ஆட்டத்தில் பிகாா் 35-19 என மேற்கு வங்கத்தை வீழ்த்தியது.

ஆடவா் பிரிவில் தமிழகத்தை 44-29 என்ற புள்ளிக்கணக்கில் ஹரியாணாவும், மற்றொரு ஆட்டத்தில் ராஜஸ்தான் 58-23 என மத்திய பிரதேசத்தையும் வீழ்த்தின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com