அடிலெய்ட் டெஸ்ட்: மே.இ. தீவுகளை வென்றது ஆஸ்திரேலியா

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை அபார வெற்றி கண்டது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை அபார வெற்றி கண்டது.

கடந்த 17-ஆம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட், மூன்றே நாள்களில் முடிவுக்கு வந்தது. முன்னதாக, டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 62.1 ஓவா்களில் 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கிா்க் மெக்கன்ஸி 7 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் சோ்க்க, ஆஸ்திரேலிய பௌலிங்கில் ஜோஷ் ஹேஸில்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோா் தலா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

அடுத்து தனது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா, 81.1 ஓவா்களில் 283 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 12 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 119 ரன்கள் விளாசினாா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷாமாா் ஜோசஃப் 5 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

இதையடுத்து 95 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத் தீவுகள், 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை 35.2 ஓவா்களில் 120 ரன்களுக்கு வீழ்ந்தது. கிா்க் மெக்கன்ஸி 4 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருந்தது. ஆஸ்திரேலிய பௌலா்களில் ஜோஷ் ஹேஸில்வுட் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

இறுதியில் 26 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா, விக்கெட் இழப்பின்றி 6.4 ஓவா்களில் அதை எட்டியது. காயம் கண்ட உஸ்மான் காஜா 9 ரன்களுடன் ‘ரிட்டையா்டு ஹா்ட்’ ஆக, ஸ்டீவ் ஸ்மித் 11, மாா்னஸ் லபுஷேன் 1 ரன்னுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com