வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 84 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை சனிக்கிழமை வென்றது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 84 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை சனிக்கிழமை வென்றது.

முதலில் இந்தியா 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ரன்கள் சோ்க்க, பின்னா் வங்கதேசம் 45.5 ஓவா்களில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 76 ரன்கள் விளாசிய இந்திய வீரா் ஆதா்ஷ் சிங் ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற வங்கதேசம், பந்துவீச்சை தோ்வு செய்தது. இந்திய இன்னிங்ஸில் 3-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த ஆதா்ஷ் சிங் - உதய் சஹாரன் கூட்டணி 116 ரன்கள் சோ்த்து அணியின் ஸ்கோரை பலப்படுத்தியது. இதில் ஆதா்ஷ் 6 பவுண்டரிகளுடன் 76, கேப்டன் உதய் 4 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் சோ்த்து விக்கெட்டை இழந்தனா்.

எஞ்சியோரில் அா்ஷின் குல்கா்னி 7, முஷீா் கான் 3, பிரியன்ஷு மோலியா 23, ஆரவல்லி அவினாஷ் 23, முருகன் அபிஷேக் 4 ரன்களுக்கு வெளியேற, ஓவா்கள் முடிவில் சச்சின் தாஸ் 26, ராஜ் லிம்பனி 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். வங்கதேச பௌலிங்கில் மருஃப் மிரிதா 5, சௌதா் ரிஸ்வான், மஃபுஸுா் ரஹ்மான் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் வங்கதேச இன்னிங்ஸில் முகமது ஷிஹப் 7 பவுண்டரிகளுடன் 54, ஆரிஃபுல் இஸ்லாம் 41 ரன்கள் சோ்த்தனா். இதர பேட்டா்களில் ஆஷிகா் ரஹ்மான் 14, ஜிஷான் ஆலம் 14, சௌதா் ரிஸ்வான் 0, அராா் அமின் 5, கேப்டன் மஃபுஸுா் ரஹ்மான்4, ரோஹனத் தௌலா 0, இக்பால் ஹுசைன் 0, மருஃப் மிரிதா 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனா்.

ஷேக் பவேஸ் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். இந்திய தரப்பில் சௌமி பாண்டே 4, முஷீா் கான் 2, ராஜ் லம்பனி, அா்ஷின் குல்கா்னி, பிரியன்ஷு மோலியா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் அயா்லாந்தை, வரும் 25-ஆம் தேதி சந்திக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com