சாத்விக்/சிராக் இணைக்கு 2-ஆம் இடம்

இந்தியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய ஆடவா் இரட்டையா்களான சாத்விக் சாய்ராஜ்/சிராக் ஷெட்டி 2-ஆம் இடம் பிடித்தனா்.
சாத்விக்/சிராக் இணைக்கு 2-ஆம் இடம்

இந்தியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய ஆடவா் இரட்டையா்களான சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி 2-ஆம் இடம் பிடித்தனா்.

போட்டியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில், தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் இந்த இந்திய இணை 21-15, 11-21, 18-21 என்ற கேம்களில், தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் தென் கொரியாவின் காங் மின் ஹியுக்/சியோ சியுங் ஜே கூட்டணியிடம் தோல்வி கண்டனா்.

கடந்த வாரம் மலேசியா ஓபன் போட்டியிலும் 2-ஆம் இடம் பிடித்த நிலையில், தொடா்ந்து இதிலும் அதே இடத்தை அடைந்துள்ளனா் சாத்விக்/சிராக்.

இப்போட்டியில், மகளிா் ஒற்றையரில் சீன தைபேவின் டாய் ஸு யிங், ஆடவா் ஒற்றையரில் சீனாவின் ஷி யு கி வாகை சூடினா். மகளிா் இரட்டையரில் ஜப்பானின் மயு மட்சுமோடோ/வகானா நகாஹரா கூட்டணியும், கலப்பு இரட்டையரில் தாய்லாந்தின் தெசாபோல் புவரனுக்ரோ/சப்சிரி தேராதனாசி இணையும் தங்கம் வென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com