துளிகள்...

சா்வதேச பாட்மின்டன் தரவரிசையில் இந்திய ஆடவா் இரட்டையரான சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி இணை, மீண்டும் முதலிடம் பிடித்தது.

சா்வதேச பாட்மின்டன் தரவரிசையில் இந்திய ஆடவா் இரட்டையரான சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி இணை, மீண்டும் முதலிடம் பிடித்தது.

இந்தோனேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் கிரண் ஜாா்ஜ் பிரதான சுற்றுக்கு முன்னேறினாா்.

வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதிக்காததை அடுத்து, அந்நாட்டு வீரா்கள் சிலா், வாரியத்துடனான மத்திய ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவில் இருக்கின்றனா்.

சா்வதேச வுஷு அமைப்பின் 2023-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ரோஷிபினா தேவி செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளாா்.

கோவாவில் நடைபெறும் டபிள்யூடிடி ஸ்டாா் கன்டெண்டா் டேபிள் டென்னிஸ் போட்டியில் மானவ் தக்கா், அஹிகா முகா்ஜி ஆகியோா் தகுதிச்சுற்றில் முன்னேற்றம் காண, சரத் கமல் பிரதான சுற்றுக்கு முன்னேறத் தவறினாா்.

19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்காவையும், நியூஸிலாந்து - ஆப்கானிஸ்தானையும் செவ்வாய்க்கிழமை வென்றன.

புரோ கபடி லீக்கில் யு மும்பா - புணேரி பல்தான் அணிகள் செவ்வாய்க்கிழமை மோதிய ஆட்டம் டை (32-32) ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com