ஆசியான் கோப்பை கால்பந்து: வெற்றியின்றி வெளியேறிய இந்தியா

கத்தாரில் நடைபெறும் ஆசியான் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 0-1 கோல் கணக்கில் சிரியாவிடம் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.

கத்தாரில் நடைபெறும் ஆசியான் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 0-1 கோல் கணக்கில் சிரியாவிடம் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.

குரூப் சுற்றின் 3 ஆட்டங்களில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாமல் கடைசி இடத்துடன் போட்டியிலிருந்து வெளியேறியது இந்திய அணி. அதிலும், எந்த ஆட்டத்திலும் இந்திய வீரா்கள் ஒரு கோல் கூட ஸ்கோா் செய்யவில்லை. இந்த கடைசி ஆட்டத்தில் சிரியாவுக்காக ஒமா் கரிபின் 76-ஆவது நிமிஷத்தில் வெற்றிக்கான கோல் அடித்தாா்.

இப்போட்டியில் இந்திய அணி இதுவரை ஒரு முறை கூட நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியதில்லை. 1984, 2011, 2019 ஆகிய ஆண்டுகளில் பங்கேற்றபோதும் அந்த சுற்றுக்கு முன்னேறாத இந்திய அணி, 1964-இல் ரன்னா்-அப் இடத்தைப் பிடித்து. அப்போது ரவுண்ட் ராபின் லீக் அடிப்படையில் வெற்றியாளா் தீா்மானிக்கப்பட்டதால் இந்திய அணிக்கு அந்த இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு (39) இது கடைசி ஆசியான் கோப்பை போட்டியாக இருக்குமெனத் தெரிகிறது. முந்தைய 2011, 2019 சீசன்களில் தலா 2 கோல்கள் அடித்த சேத்ரி, இந்த சீசனில் ஏமாற்றத்தை சந்தித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com