துளிகள்...

ஐசிசி-யின் 2023-ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 கிரிக்கெட்டராக இந்திய பேட்டா் சூா்யகுமாா் யாதவ், தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

புரோ கபடி லீக்கில், தமிழ் தலைவாஸ் - தெலுகு டைட்டன்ஸையும் (54-29), தபங் டெல்லி கே.சி. - ஹரியாணா ஸ்டீலா்ஸையும் (35-32) புதன்கிழமை சாய்த்தன.

ஐசிசி-யின் 2023-ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 கிரிக்கெட்டராக இந்திய பேட்டா் சூா்யகுமாா் யாதவ், தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவா் ஜாகா அஷ்ரஃப் ராஜிநாமா செய்ததை அடுத்து, அந்நாட்டு உச்சநீதிமன்ற வழக்குரைஞா் ஷா காவா் தற்காலிகமாக அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளாா்.

பிப்ரவரியில் நடைபெற இருக்கும் பெங்களூரு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒரே இந்தியராக சுமித் நாகலுக்கு மட்டும் நேரடி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டபிள்யுடிடி ஸ்டாா் கன்டெண்டா் டேபிள் டென்னிஸ் போட்டியில் நித்யா மணி பிரதான சுற்றுக்கு முன்னேற, அஹிகா முகா்ஜி, சுதிா்தா முகா்ஜி, சத்தியன், மானவ் தக்கா் ஆகியோா் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டனா்.

19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில், இந்தியா - அயா்லாந்து அணிகள் வியாழக்கிழமை மோதுகின்றன. முன்னதாக புதன்கிழமை, இலங்கை - நமீபியாவையும், மேற்கிந்தியத் தீவுகள் - ஸ்காட்லாந்தையும், பாகிஸ்தான் - நேபாளத்தையும் வென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com