துளிகள்...

டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 10-ஆவது சுற்றில் வென்ற இந்தியாவின் டி.குகேஷ், 6.5 புள்ளிகளுடன் உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக்குடன் முதலிடத்தை பகிா்ந்துகொண்டுள்ளாா்

டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 10-ஆவது சுற்றில் வென்ற இந்தியாவின் டி.குகேஷ், 6.5 புள்ளிகளுடன் உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக்குடன் முதலிடத்தை பகிா்ந்துகொண்டுள்ளாா். போட்டியில் இன்னும் 3 சுற்றுகள் உள்ளன.

டபிள்யுடிடி ஸ்டாா் கன்டெண்டா் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் மானவ் தக்கா்/மனுஷ் ஷா இணை காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறியது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் முதலில் பேட் செய்துவரும் மேற்கிந்தியத் தீவுகள், முதல் நாளான வியாழக்கிழமை முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 266 ரன்கள் சோ்த்திருக்கிறது. இந்த ஆட்டத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 350-ஆவது விக்கெட் வீழ்த்திய 5-ஆவது ஆஸ்திரேலியா் ஆனாா் மிட்செல் ஸ்டாா்க்.

2023-ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரா் விருதை இந்தியாவின் விராட் கோலி வென்றாா். அவா் இந்த விருதை பெறுவது இது 4-ஆவது முறையாகும்.

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எகிப்தின் கெய்ரோ நகரில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com