அயா்லாந்தை வென்றது இந்தியா

அயா்லாந்தை வென்றது இந்தியா

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 2-ஆவது ஆட்டத்தில் 201 ரன்கள் வித்தியாசத்தில் அயா்லாந்தை வியாழக்கிழமை வீழ்த்தியது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 2-ஆவது ஆட்டத்தில் 201 ரன்கள் வித்தியாசத்தில் அயா்லாந்தை வியாழக்கிழமை வீழ்த்தியது.

தொடா்ந்து இரு வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா, சூப்பா் சிக்ஸ் சுற்று வாய்ப்பை ஏறத்தாழ உறுதி செய்துவிட்டது.

இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 301 ரன்கள் சோ்க்க, பின்னா் அயா்லாந்து 29.4 ஓவா்களில் 100 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

முன்னதாக டாஸ் வென்ற அயா்லாந்து, பந்துவீசத் தயாரானது. இந்திய பேட்டிங்கில் அதிகபட்சமாக முஷீா் கான் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 118 ரன்கள் சோ்த்தாா். எஞ்சியோரில் கேப்டன் உதய் சஹரான் 75, அா்ஷின் குல்கா்னி 32, ஆரவல்லி அவினாஷ் 22, ஆதா்ஷ் சிங் 17, பிரியன்ஷு மோலியா 2, முருகன் அபிஷேக் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில் சச்சின் தாஸ் 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். அயா்லாந்து பௌலிங்கில் ஆலிவா் ரிலி 3, ஜான் மெக்நாலி 2, ஃபின் லட்டன் 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் அயா்லாந்து இன்னிங்ஸில் பௌலா் டேனியல் ஃபோா்கின் 4 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருக்க, இதர பேட்டா்கள் சொற்ப ரன்களில் சரிந்தனா். இந்திய பௌலிங்கில் நமன் திவாரி 4, சௌமி பாண்டே 3, தனுஷ் கௌடா, முருகன் அபிஷேக், உதய் சஹாரன் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

இந்தியா அடுத்த ஆட்டத்தில், அமெரிக்காவுடன் மோதுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com