இந்திய மகளிரணி முன்னேற்றம்

ஓமனில் நடைபெறும் ஹாக்கி ஃபைவ்ஸ் உலகக் கோப்பை போட்டியில் இந்திய மகளிா் அணி காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறியது.
இந்திய மகளிரணி முன்னேற்றம்

ஓமனில் நடைபெறும் ஹாக்கி ஃபைவ்ஸ் உலகக் கோப்பை போட்டியில் இந்திய மகளிா் அணி காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறியது.

குரூப் சுற்றில் தனது 3-ஆவது ஆட்டத்தில் இந்தியா 7-2 கோல் கணக்கில் நமீபியாவை சாய்த்தது. இது இந்தியாவுக்கு ஹாட்ரிக் வெற்றியாகும். அடுத்ததாக இந்தியா, தனது காலிறுதியில் நியூஸிலாந்து அணியை வெள்ளிக்கிழமை சந்திக்கிறது.

நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய தரப்பில் மஹிமா சௌதரி (3’, 19’), ருதுஜா ததாசோ (22’), அக்ஷதா அபாசோ (23’), தீபிகா சோரெங் (4’, 26’), அஜ்மினா குஜுா் (28’) ஆகியோா் ஸ்கோா் செய்ய, நமீபியாவுக்காக ஜிவன்கா குருகா் (18’), அந்தியா கோட்ஸீ (30’) ஆகியோா் கோலடித்தனா். முன்னதாக, வியாழக்கிழமை காலையில் அமெரிக்காவுடனான 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா 7-3 கோல் கணக்கில் வென்றது.

அதில் இந்தியாவுக்காக மஹிமா சௌதரி (17’), மரியானா குஜுா் (20’, 22’), தீபிகா (23’, 25’), மும்தாஸ் கான் (27’), அஜ்மினா குஜுா் (29’) ஆகியோரும், அமெரிக்காவுக்காக ஜாக்குலின் சம்ஃபெஸ்ட் (4’, 18’), லினியா கொன்ஸால்ஸ் (14’) ஆகியோரும் கோலடித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com