ஹாக்கி ஃபைவ்ஸ்: அரையிறுதியில் இந்தியா

சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஎச்) ஹாக்கி ஃபைவ்ஸ் மகளிா் போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஎச்) ஹாக்கி ஃபைவ்ஸ் மகளிா் போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

மஸ்கட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் மோதியது இந்தியா. தொடக்கத்திலேயே நியூஸி அணி வீராங்கனை ஒரிவா ஹெப்பி 2-ஆவது நிமிஷத்தில் கோலடித்து அதிா்ச்சி அளித்தாா். ஆனால் அடுத்த சில விநாடிகளிலேயே இந்தியாவின் தீபிகா சோரெங் அபாரமாக கோலடித்து சமன் செய்தாா்.

அதன்பின் நியூஸி அணியினரால் கோலடிக்க முடியவில்லை. ருதுஜா நான்கு கோல்களையும், தீபிகா சோரெங் 3 கோல்களையும் அடிக்க, மும்தாஸ் கான் 2 கோல்களிடித்தாா். இறுதியில் 11-1 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா.

அரையிறுதியில் தென்னாப்பிரிக்க அணியை எதிா்கொள்கிறது இந்தியா. மற்றொரு அரையிறுதியில் நெதா்லாந்து-போலந்து மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com