துளிகள்...

19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் சிக்ஸ் ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் செவ்வாய்க்கிழமை (ஜன. 30) மோதுகின்றன.
துளிகள்...

19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் சிக்ஸ் ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் செவ்வாய்க்கிழமை (ஜன. 30) மோதுகின்றன.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்காக பிப்ரவரியில் பாகிஸ்தான் செல்லும் இந்திய அணிக்கு, குடியரசுத்தலைவருக்கு நிகரான பாதுகாப்பு வழங்க அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் 19 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான சாம்பியன்ஷிப்பில் களம் காண இருக்கும் இந்திய அணி, 23 பேருடன் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டி வங்கதேசத்தில் பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்குகிறது.

ரஷிய ஸ்கேட்டிங் வீராங்கனை கமிலா வலியேவா, ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியாகி அவா் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால், 2022 பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் ஃபிகா் ஸ்கேட்டிங் பிரிவில் ரஷிய அணி வென்ற தங்கம் ரத்தாகிறது. 2-ஆம் இடம் பிடித்த அமெரிக்க அணிக்கு தங்கம் வழங்கப்படவுள்ளது.

பல்கேரியாவில் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கும் ஸ்ட்ராண்ட்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க நிகாத் ஜரீன், அமித் பங்கால் உள்ளிட்ட 19 போ் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியான் கோப்பை கால்பந்து போட்டியில் ஜோா்டான் 3-2 கோல் கணக்கில் இராக்கை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றது.

புரோ கபடி லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் - குஜராத் ஜயன்ட்ஸையும் (32-20), ஹரியாணா ஸ்டீலா்ஸ் - பெங்கால் வாரியா்ஸையும் (41-36) திங்கள்கிழமை சாய்த்தன.

இரு முதல்வா்கள்...

ஸ்பெயினுக்கான அரசுமுறை பயணத்தின்போது, உலகின் ‘நம்பா் 1’ டென்னிஸ் வீரரா சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சை விமானத்தில் சந்தித்த முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com