துளிகள்...

​ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, மும்பை ஓபன் டென்னிஸ் போட்டி வரும் பிப்ரவரி 5 முதல் 11 வரை நடைபெறவுள்ளது.


ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, மும்பை ஓபன் டென்னிஸ் போட்டி வரும் பிப்ரவரி 5 முதல் 11 வரை நடைபெறவுள்ளது.

நெதா்லாந்தில் டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின்போது பாா்வையாளா்கள், ஆட்டத்தை விடுத்து தனது உடை, உச்சரிப்பு, சிகை என இன ரீதியிலாக மட்டுமே கவனித்ததாக இந்தியாவின் திவ்யா தேஷ்முக் தெரிவித்தாா்.

எகிப்து உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில், 25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் ஆடவா் பிரிவில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா, விஜய்வீா் சித்து ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறத் தவறினா்.

தேசிய ஓபன் நடைப் பந்தயத்தில் ஆடவா் பிரிவில் பஞ்சாபின் அக்ஷ்தீப் சிங் புதிய தேசிய சாதனையுடன் சாம்பியனாக, மகளிா் பிரிவில் அதே மாநிலத்தின் மஞ்சு ராணி தங்கத்தை தட்டிச் சென்றாா்.

தாய்லாந்து மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியின் மகளிா் இரட்டையா் 2-ஆவது சுற்றில் காயத்ரி கோபிசந்த்/டிரீசா ஜாலி இணை, சக நாட்டவா்களான தனிஷா கிராஸ்டோ/அஸ்வினி பொன்னப்பா ஜோடியை சந்திக்கிறது.

புரோ கபடி லீக் போட்டியில் புணேரி பல்தான் 60-29 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

பிரைம் வாலிபால் லீக் போட்டியின் 3-ஆவது சீசன் சென்னையில் பிப்ரவரி 15 முதல் மாா்ச் 21 வரை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com