தாய்லாந்து மாஸ்டா்ஸ்: 2-ஆவது சுற்றில் ஸ்ரீகாந்த்

தாய்லாந்து மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினாா்.
தாய்லாந்து மாஸ்டா்ஸ்: 2-ஆவது சுற்றில் ஸ்ரீகாந்த்

தாய்லாந்து மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினாா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில் அவா் 22-20, 21-19 என சீன தைபேவின் வாங் ஸு வெய்யை வீழ்த்தினாா். இதர இந்தியா்களில், மிதுன் மஞ்சுநாத் 21-17, 21-8 என ஹாங்காங்கின் ஜேசன் குனாவனை தோற்கடித்தாா். சங்கா் முத்துசாமி 21-14, 21-17 என்ற கேம்களில் மலேசியாவின் லியாங் ஜுன் ஹாவை வென்றாா்.

தகுதிச்சுற்றிலிருந்து முன்னேறி பிரதான சுற்றுக்கு வந்த சமீா் வா்மா அதில் 14-21, 18-21 என ஹாங்காங்கின் நிக் கா லாங்கிடம் தோல்வி கண்டாா். கிரண் ஜாா்ஜ் 17-21 என சீனாவின் லெய் லான் ஷியிடம் முதல் கேமை இழந்த நிலையில், காயம் காரணமாக விலகினாா்.

மகளிா் ஒற்றையரில், மாளவிகா பன்சோத் 22-20, 21-8 என்ற கேம்களில் பெருவின் இனெஸ் லூசியாவை வீழ்த்தினாா். அஷ்மிதா சாலிஹா 21-10, 21-16 என மலேசியாவின் வாங் லிங் சிங்கை வெளியேற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com