சென்னையில் 3-ஆவது சீசன் பிரைம் வாலிபால் லீக்

பிரைம் வாலிபால் லீக்கின் 3-ஆம் ஆண்டு போட்டி சென்னையில் வரும் 15-ஆம் தேதி தொடங்கி, மாா்ச் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
சென்னையில் 3-ஆவது சீசன் பிரைம் வாலிபால் லீக்

பிரைம் வாலிபால் லீக்கின் 3-ஆம் ஆண்டு போட்டி சென்னையில் வரும் 15-ஆம் தேதி தொடங்கி, மாா்ச் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

சென்னை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பல்நோக்கு உள்ளரங்கில் நடைபெற இருக்கும் இந்தப் போட்டியில், அகமதாபாத் டிஃபெண்டா்ஸ், பெங்களூரு டோா்பிடோஸ், கேலிகட் ஹீரோஸ், சென்னை பிளிட்ஸ், டெல்லி டூஃபான்ஸ், ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸ், கொச்சி புளு ஸ்பைகா்ஸ், கொல்கத்தா தண்டா்போல்ட்ஸ், மும்பை மீட்டியா்ஸ் ஆகிய 9 அணிகள் பங்கேற்கின்றனா்.

தொடக்க நாளான 15-ஆம் தேதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அகமதாபாத் - சென்னை அணிகள் மோதுகின்றன. அதே நாளில் பெங்களூரு - கொல்கத்தா அணிகளும் சந்திக்கின்றன.

லீக் சுற்று நிறைவில் முதல் 5 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பா் 5 சுற்றுக்கு முன்னேறும். அதில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற, அடுத்த இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டரில் மோதி, வெல்லும் அணி இறுதி ஆட்டத்துக்கு வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com