அபய் சிங், வேலவன்
அபய் சிங், வேலவன்

ஆசிய இரட்டையா் ஸ்குவாஷ்: இறுதிச் சுற்றில் இந்தியா

ஆசிய இரட்டையா் ஸ்குவாஷ் போட்டி இரு பிரிவுகளில் இந்தியா இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

மலேசியாவின் ஜோஹோா் நகரில் நடைபெற்று வரும் ஆசிய இரட்டையா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி ஆடவா் பிரிவில் இந்தியாவின் அபய் சிங்-வேலவன் செந்தில்குமாா் இணை 11-9, 11-2 என்ற கேம் கணக்கில் ஜப்பானின் டோமடகா-நவோகி ஹயாஷி இணையை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது.

அதே போல் கலப்பு இரட்டையா் பிரிவில் அனுபவம் வாய்ந்த ஜோஷ்னா சின்னப்பா-அபய் சிங் இணை 11-8, 11-10 என்ற கேம் கணக்கில் ஹாங்காங்கின் செங் சிங்-லய் சியுக் நம் இணையை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஆடவா் இறுதியில் மலேசியாவின் ஆங் சாய் ஹுங்-சயாபிக் கமால்-அபய் சிங்-வேலவன் இணையும், கலப்பு இறுதியில் ஜோஷ்னா அபய்=ஹாங்காங்கின் டாங் விங்-டேங் மிங் இணையுடன் மோதுகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com