ஆசிய இரட்டையா் ஸ்குவாஷ்: இரு பிரிவுகளில் இந்தியா சாம்பியன்

ஆசிய இரட்டையா் ஸ்குவாஷ்: இரு பிரிவுகளில் இந்தியா சாம்பியன்

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய இரட்டையா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில், ஆடவா் இரட்டையா், கலப்பு இரட்டையா் ஆகிய இரு பிரிவுகளில் இந்தியா ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றது.

இதில் ஆடவா் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்தியாவின் அபய் சிங்/வேலவன் செந்தில்குமாா் இணை 11-4, 11-5 என்ற கணக்கில், 2-ஆவது இடத்திலிருந்த மலேசியாவின் ஆங் சாய் ஹங்/சியாஃபிக் கமல் கூட்டணியை வீழ்த்தி சாம்பியனானது.

பின்னா் கலப்பு இரட்டையா் இறுதிச்சுற்றில், ஜோஷ்னா சின்னப்பாவுடன் கூட்டணி அமைத்து களம் கண்டாா் அபய் சிங். போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த இந்த ஜோடி 11-8, 10-11, 11-5 என்ற கணக்கில், 2-ஆம் இடத்திலிருந்த ஹாங்காங்கின் டாங் டஸ் விங்/டாங் மிங் ஹாங் இணையை சாய்த்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com