ராகுலுக்கு ரோஹித் நன்றி!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ராகுல் திராவிட் விடைபெற்றுள்ள நிலையில், அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவருக்கு உணர்வுப்பூர்வமாக நன்றி தெரிவித்துள்ளார்.
ராகுலுக்கு ரோஹித் நன்றி!

புது தில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ராகுல் திராவிட் விடைபெற்றுள்ள நிலையில், அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அவருக்கு உணர்வுப்பூர்வமாக நன்றி தெரிவித்துள்ளார்.

"இன்ஸ்டாகிராம்' சமூகவலைதளத்தில் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில் ரோஹித் கூறியுள்ளதாவது: பணியிடத்தில் நீங்கள் (திராவிட்) எனது மனைவி என்று, என் மனைவியே என்னிடம் கூறும் அளவுக்கு நமது பிணைப்பு இருந்ததில் மகிழ்ச்சி.

கிரிக்கெட்டின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரம் நீங்கள். ஆனால், ஒரு பயிற்சியாளராக எங்களிடம் வரும்போது, உங்களின் சாதனைகள், பெருமைகள் அனைத்தையும் அப்படியே கைவிட்டு, எங்களுக்கு இணையாக வந்தீர்கள். இதுவே, எந்தவொரு விஷயத்தையும் உங்களிடம் பேசக் கூடிய ஒரு சகஜமான சூழலை எங்களுக்கு அளித்தது.

சிறுவனாக இருந்த காலகட்டத்திலிருந்தே, இதர பல கோடி இந்தியர்களைப் போல நானும் உங்களை ஆச்சர்யமாகப் பார்த்திருக்கிறேன். உங்களுடன் இவ்வளவு நெருங்கி பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது அதிருஷ்டமே. உங்களிடம் அதிகம் கற்றுக்கொண்டேன். உங்களுடனான ஒவ்வொரு தருணமும் நினைவில் நிற்கும்.

உங்களது சாதனைப் பட்டியலில் உலகக் கோப்பை ஒன்றுதான் மிச்சமிருந்தது. அதையும் நாம் இணைந்து பெற்றதில் மகிழ்ச்சி. உங்களை எனது நம்பகத்துக்குரியவர், பயிற்சியாளர், நண்பர் என்று அழைப்பதில் கெளரவமடைகிறேன் என்று ரோஹித் அதில் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com