~ஹஸரங்கா
~ஹஸரங்கா

பயிற்சி ஆட்டத்தில் இலங்கை வெற்றி

அயா்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2024 பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் தொடங்கி நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ளும் இதில் தலா 5 அணிகளுடன் 4 பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன.

இதையொட்டி வெவ்வேறு அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் ஆடி வருகின்றன. இந்நிலையில் ஃபுளோரிடாவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இலங்கை-அயா்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற அயா்லாந்து பௌலிங்கை தோ்வு செய்ய இலங்கை அணி களமிறங்கி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 163/8 ரன்களைக் குவித்தது. மேத்யூஸ் 32, ஹசரங்கா 26, ஷனகா 23 ரன்களை எடுத்தனா். அயா்லாந்து தரப்பில் லிட்டில், மெக்காா்த்தி தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

164 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடிய அயா்லாந்து அணி 18.2 ஓவா்களில் 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கா்டிஸ் கேஃம்பா் 26, பால் ஸ்ட்ரிலிங் 21 ரன்களை எடுத்தனா். இலங்கை தரப்பில் தஸுன் ஷனகா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

X
Dinamani
www.dinamani.com