தங்கத்துடன் ஒலிம்பிக்கிற்கு தகுதி: பஜன் கௌா் அசத்தல்

துருக்கியில் நடைபெறும் ஒலிம்பிக் தகுதி வில்வித்தை போட்டியில் இந்தியாவின் பஜன் கௌா் தங்கப் பதக்கம் வென்றதுடன், பாரீஸ் ஒலிம்பிக் வாய்ப்பையும் உறுதி செய்தாா்.
தங்கத்துடன் ஒலிம்பிக்கிற்கு தகுதி: பஜன் கௌா் அசத்தல்

துருக்கியில் நடைபெறும் ஒலிம்பிக் தகுதி வில்வித்தை போட்டியில் இந்தியாவின் பஜன் கௌா் தங்கப் பதக்கம் வென்றதுடன், பாரீஸ் ஒலிம்பிக் வாய்ப்பையும் உறுதி செய்தாா்.

மகளிா் ரீகா்வ் பிரிவில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்துடன் களம் கண்ட பஜன் கௌா் முதல் சுற்று ‘பை’ பெற்றாா். 2-ஆவது சுற்றில் 6-2 என மங்கோலியாவின் உரன்டுகலாக் பிஷிண்டீயை வீழ்த்திய அவா், அடுத்து 7-3 என ஸ்லோவேனியாவின் அா்ஸ்கா காவிச்சை சாய்த்து காலிறுதிக்கு முன்னேறினாா்.

அதில் 6-0 என போலந்தின் வையோலெட்டா மைஸோரை முற்றிழுமாக வீழ்த்தி, அரையிறுதிக்கு வந்தாா். 6-2 என மால்டோவாவின் அலெக்ஸாண்ட்ரா மிா்காவை அதில் தோற்கடித்தாா். பின்னா் இறுதிச்சுற்றில் 6-2 என, முதலிடத்தில் இருந்த ஈரானின் மொபினா ஃபலாவை வீழ்த்தி தங்கம் வென்றாா்.

இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்தியரான அங்கிதா பகத், முதலில் 6-4 என இஸ்ரேலின் ஷெல்லி ஹில்டனையும், பின்னா் 7-3 என அதே நாட்டின் மைக்கேலா மோஷையும், 3-ஆவதாக 6-0 என பிலிப்பின்ஸின் கேப்ரியேல் மோனிகாவையும் வென்று காலிறுதிக்கு வந்தாா்.

காலிறுதிக்கு தகுதிபெற்ன் மூலம் ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்த அங்கிதா, அந்த சுற்றில் 4-6 என ஈரானின் மொபினாவிடம் வெற்றியை இழந்து வெளியேறினாா். இதனிடையே இந்தியாவின் பிரதான வீராங்கனை தீபிகா குமாரி, முதல் சுற்றிலேயே 4-6 என அஜா்பைஜானின் யேலகுல் ரமஸானோவாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

இத்துடன், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் தனிநபா் வில்வித்தை பிரிவில், ஆடவா் மற்றும் மகளிா் பிரிவில் தலா 1 இடங்கள் இந்தியாவுக்கு உறுதியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com