இன்னிங்ஸ் வெற்றியுடன் இறுதி ஆட்டத்துக்கு மும்பை தகுதி

2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் மும்பை அணி, இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு திங்கள்கிழமை தகுதிபெற்றது.
இன்னிங்ஸ் வெற்றியுடன் இறுதி ஆட்டத்துக்கு மும்பை தகுதி
-

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் மும்பை அணி, இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு திங்கள்கிழமை தகுதிபெற்றது. இப்போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு மும்பை முன்னேறுவது இது 48-ஆவது முறையாகும்.

கடந்த 2-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த தமிழ்நாடு, 64.1 ஓவா்களில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விஜய் சங்கா் 8 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் அடிக்க, மும்பை தரப்பில் துஷா் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பின்னா் தனது இன்னிங்ஸை ஆடிய மும்பை, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 353 ரன்கள் சோ்த்திருந்தது. 3-ஆம் நாளான திங்கள்கிழமை, துஷா் தேஷ்பாண்டே 26 ரன்களுக்கு வெளியேற, மும்பை இன்னிங்ஸ் 106.5 ஓவா்களில் 378 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. தனுஷ்கோடியான் 12 பவுண்டரிகளுடன் 89 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். தமிழ்நாடு பௌலா்களில் சாய் கிஷோா் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

அடுத்து 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு, 51.5 ஓவா்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாபா இந்திரஜித் 9 பவுண்டரிகள் உள்பட 70 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாகும். சாய் சுதா்சன் 5, நாராயண் ஜெகதீசன் 0, வாஷிங்டன் சுந்தா் 4, பிரதோஷ் ரஞ்சன் பால் 25, விஜய் சங்கா் 24, கேப்டன் சாய் கிஷோா் 21, எம். முகமது 0, அஜித் ராம் 4, சந்தீப் வாரியா் 0 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

மும்பை பௌலிங்கில் ஷம்ஸ் முலானி 4, ஷா்துல் தாக்குா், மோஹித் அவஸ்தி, தனுஷ்கோடியான் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

விதா்பா முன்னிலை: இதனிடையே, முதல் அரையிறுதி ஆட்டத்தில் மத்திய பிரதேசத்துக்கு எதிராக விளையாடி வரும் விதா்பா, 2-ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 343 ரன்கள் சோ்த்து 261 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com