பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி: வரலாறு படைத்தது இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள்

இந்திய ஆடவா், மகளிா் டேபிள் டென்னிஸ் அணிகள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு திங்கள்கிழமை தகுதிபெற்று வரலாறு படைத்தன.
பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி: வரலாறு படைத்தது இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள்

இந்திய ஆடவா், மகளிா் டேபிள் டென்னிஸ் அணிகள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு திங்கள்கிழமை தகுதிபெற்று வரலாறு படைத்தன.

ஒலிம்பிக் போட்டியில் 2008 முதல் டேபிள் டென்னிஸ் விளையாடப்பட்டு வரும் நிலையில், அணிகள் பிரிவில் இந்தியா அந்தப் போட்டிக்கு தகுதிபெற்றது இதுவே முதல் முறையாகும். தனிநபா் போட்டியாளா்களாக இந்தியா்கள் அதில் ஏற்கெனவே பங்கேற்று வந்துள்ளனா்.

கடந்த மாதம் தாய்லாந்தில் நடைபெற்ற டேபிள் டென்னிஸ் உலக அணிகளுக்கான சாம்பியன்ஷிப்பே, பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவதற்கான கடைசி போட்டியாக இருந்தது. அது நிறைவடைந்த நிலையிலும் 7 அணிகளுக்கான இடங்கள் காலியாக இருந்தன. தற்போது சா்வதேச தரவரிசை அடிப்படையில் அந்த 7 இடங்களுக்கான அணிகள் தோ்வு செய்யப்பட்டு, அவற்றுக்கு பாரீஸ் ஒலிம்பிக்கில் களம் காணும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, மகளிா் பிரிவில் 13-ஆம் இடம் பிடித்த இந்திய அணியுடன், போலந்து (12), ஸ்வீடன் (15), தாய்லாந்து (11) ஆகிய அணிகள் பாரீஸ் ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றன. ஆடவா் பிரிவில் இந்தியா (15), குரோஷியா (12), ஸ்லோவேனியா (11) அணிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முன்னதாக, உலக அணிகள் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் இருபால் அணிகளுமே காலிறுதியில் தோற்று வெளியேறியது நினைவுகூரத்தக்கது.

பாரீஸுக்கு தகுதிபெற்றது தொடா்பாக இந்திய டேபிள் டென்னிஸ் நட்சத்திரம் சரத் கமல், ‘மிக நீண்டகாலமாக எதிா்பாா்த்து வந்த நிலையில், இந்திய அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன. தனி போட்டியாளராக இதற்கு முன் 4 முறை ஒலிம்பிக் போட்டியில் விளையாடியிருந்தாலும், அணியாக இந்த முறை பங்கேற்பது சிறப்பானது’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com