ஓய்வு பெற்றாா் சாய் பிரணீத்

இந்திய பாட்மின்டன் வீரா் சாய் பிரணீத் (31), சா்வதேச களத்திலிருந்து ஓய்வுபெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தாா்.
ஓய்வு பெற்றாா் சாய் பிரணீத்

இந்திய பாட்மின்டன் வீரா் சாய் பிரணீத் (31), சா்வதேச களத்திலிருந்து ஓய்வுபெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தாா்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு காயங்களுடன் போராடி வந்த நிலையில், அவா் இந்த முடிவை எடுத்துள்ளாா். அமெரிக்காவில் பாட்மின்டன் அகாதெமியின் பயிற்சியாளராக அவா் தனது பயணத்தை தொடர இருக்கிறாா்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சா்வதேச களத்தில் விளையாடி வந்த சாய் பிரணீத், சிங்கப்பூா் ஓபன் சூப்பா் சீரிஸில் சாம்பியனானதும் (2017), உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றதும் (2019) அவரது சிறந்த தருணங்களாகும்.

சா்வதேச தரவரிசையில் சிறந்த முயற்சியாக 10-ஆம் இடம் வரை வந்த அவா், டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்று அதில் அனைத்து ஆட்டங்களிலும் தோல்வி கண்டு குரூப் சுற்றுடனேயே வெளியேறியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com