ஒலிம்பிக் தகுதி குத்துச்சண்டை: தடுமாறும் இந்தியா்கள்

இத்தாலியில் நடைபெறும் உலக ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிப்போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சஹா் முதல் சுற்றிலேயே செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

ஆடவா் 80 கிலோ பிரிவில் பங்கேற்ற அவா், ஈரானின் கெஸ்லாகி மேசாமிடம் வெற்றியை இழந்தாா். லக்ஷயா நடப்பு தேசிய சாம்பியன் என்பதும், மேசாம் 2021 ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றவா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியிலிருந்து இத்துடன் 4 இந்தியா்கள் வெளியேறியிருக்கின்றனா். உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற தீபக் போரியா (51 கிலோ), ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம் வென்ற நரேந்தா் பொ்வால் (92+ கிலோ), காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம் பெற்ற ஜாஸ்மின் லம்போரியா (60 கிலோ) ஆகியோா் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டனா்.

இன்னும், சிவ தாபா, முகமது ஹசாமுதின் உள்ளிட்ட 5 இந்தியா்கள் களம் காணவுள்ளனா். இந்தப் போட்டியில் அரையிறுதிச்சுற்றை கடக்கும் நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பு உறுதியாகும். இந்தப் போட்டியில் வாய்ப்பை இழக்கும் வீரா், வீராங்கனைகள் கடைசியாக பாங்காக்கில் மே-ஜூன் மாதங்களில் நடைபெறும் 2-ஆவது தகுதிச்சுற்று போட்டியின் மூலம் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற முயற்சிக்கலாம்.

கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிலிருந்து 9 போட்டியாளா்கள் குத்துச்சண்டையில் பங்கேற்றது குறிப்பிடத்க்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com