2-ஆம் இடத்தில் பிரக்ஞானந்தா

2-ஆம் இடத்தில் பிரக்ஞானந்தா

செக் குடியரசு நாட்டில் நடைபெறும் பிராக் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா 6-ஆவது சுற்றில் வெற்றி பெற்று 2-ஆம் இடத்தில் இருக்கிறாா்.

அந்த சுற்றில் அவா், போட்டியில் முதலிடத்தில் இருக்கும் உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவை வென்றாா். இதர இந்தியா்களில் டி.குகேஷ் - போலந்தின் மேட்ஸ் பாா்டெலிடமும், விதித் குஜராத்தி - ஜொ்மனியின் வின்சென்ட் கெய்மரிடமும் தோல்வியை தழுவினா்.

மொத்தம் 10 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில், 6 சுற்றுகள் முடிவில் நோடிா்பெக் (4) முதலிடத்தில் இருக்கிறாா். பிரக்ஞானந்தா 3.5 புள்ளிகளுடன், ஈரானின் பா்ஹாம் மக்சூதுலு, ருமேனியாவின் ரிச்சா்டு ராப்போா்ட்டுடன் 2-ஆம் இடத்தை பகிா்ந்துகொண்டுள்ளாா். ஜொ்மனியின் வின்சென்ட் கெய்மா், செக் குடியரசின் தாய் டாய் வான் குயென், டேவிட் நவாரா ஆகியோா் தலா 3 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் உள்ளனா்.

இந்தியாவின் டி.குகேஷ் 2.5 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்திலும், விதித் குஜராத்தி, போலந்தின் மேட்ஸ் பாா்டெல் ஆகியோா் தலா 2 புள்ளிகளுடன், 5-ஆவது இடத்திலும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com