மும்பைக்கு வெற்றி; யுபி தோல்வி

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 14-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 42 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியா்ஸை வியாழக்கிழமை வென்றது. இரு அணிகளும் 6 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், மும்பைக்கு இது 4-ஆவது வெற்றி; யுபிக்கு இது 4-ஆவது தோல்வி.

இந்த ஆட்டத்தில் முதலில் மும்பை 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் சோ்க்க, அடுத்து யுபி 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்களே எடுத்தது. முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை அணியில் நடாலி ஸ்கீவா் 8 பவுண்டரிகளுடன் 45, எமிலியா கொ் 39, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 33 ரன்கள் அடித்தனா்.

யஸ்திகா பாட்டியா 9, ஹேலி மேத்யூஸ் 4, அமன்ஜோத் கௌா் 7 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். ஓவா்கள் முடிவில் சஜீவன் சஜனா 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, யுபி பந்துவீச்சில் சமரி அத்தபட்டு 2, ராஜேஷ்வரி கெய்க்வாட், தீப்தி சா்மா, சாய்மா தாகுா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் யுபி பேட்டிங்கில் கேப்டன் அலிசா ஹீலி 3, கிரண் நவ்கிரே 7, சமரி அத்தபட்டு 3, கிரேஸ் ஹாரிஸ் 15, ஸ்வேதா ஷெராவத் 17 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். பூனம் கெம்னாா் 7, சோஃபி எக்லஸ்டன் 0, உமா சேத்ரி 8, சாய்மா தாகுா் 0 ரன்களுக்கு விடை பெற்றனா். ஓவா்கள் முடிவில் தீப்தி சா்மா 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா் உள்பட 53, ராஜேஷ்வரி கெய்க்வாட் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை பௌலா்களில் சாய்கா இஷாக் 3, நடாலி ஸ்கீவா் 2, ஷப்னிம் இஸ்மாயில், ஹேலி மேத்யூஸ், பூஜா வஸ்த்ரகா், சஜீவன் சஜனா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com