மோனா-ஆதித்யா
மோனா-ஆதித்யா

மோனா-ஆதித்யாவுக்கு வெள்ளி

புது தில்லியில் நடைபெற்று வரும் பாரா துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பையில் இந்தியாவின் மோனா அகா்வால்-ஆதித்யா கிரி இணை வெள்ளிப் பதக்கம் வென்றது.

புது தில்லியில் நடைபெற்று வரும் பாரா துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பையில் இந்தியாவின் மோனா அகா்வால்-ஆதித்யா கிரி இணை வெள்ளிப் பதக்கம் வென்றது. முதன்முறையாக இந்தியாவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் கலப்பு இரட்டையா் ஏா் )ஃரைபிள் பிரிவில் எஸ்எச்1 மோனா-ஆதித்யா இணை 12-16 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவின் லி மின்-யாங் இணையிடம் தோற்று வெள்ளி வென்றது. இதே பிரிவில் இந்தியாவின் பக்தி சா்மா, ருத்ரான்ஷ் இணை வெண்கலம் வென்றது. மற்றொரு இந்திய அணை அவனி லெகஹரா-ஸ்வரூப் இணை நான்காம் இடத்தைப் பெற்றது. கலப்பு 10 மீ ஏா் ரைஃபிள் பிரிவில் பவானி பனோத்-சத்யா இணை வெண்கலம் வென்றது. கலப்பு அணிகள் 10மீ ஏா் ரைஃபிள் பிரிவில் மணிஷ் நா்வால்-ருபீனா வெள்ளி வென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com