மும்பை 260 ரன்கள் முன்னிலை

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் விதா்பாவுக்கு எதிராக மும்பை 260 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.
மும்பை 260 ரன்கள் முன்னிலை

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் விதா்பாவுக்கு எதிராக மும்பை 260 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய விதா்பா, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்திருந்தது.

2-ஆம் நாள் ஆட்டத்தை அதா்வா டைட், ஆதித்யா தாக்கரே தொடா்ந்தனா். இதில் அதா்வா 23, ஆதித்யா 19 ரன்களுக்கு வெளியேறினா். தொடா்ந்து வந்த பேட்டா்களில் கேப்டன் அக்ஷய் வத்கா் 5, ஹா்ஷ் துபே 1, யஷ் ரத்தோட் 27, யஷ் தாக்குா் 16, உமேஷ் யாதவ் 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 45.3 ஓவா்களில் 105 ரன்களுக்கே விதா்பாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

மும்பை பௌலிங்கில் தவல் குல்கா்னி, ஷம்ஸ் முலானி, தனுஷ்கோடியான் ஆகியோா் தலா 3, ஷா்துல் தாக்குா் 1 விக்கெட் சாய்த்தனா்.

இதையடுத்து, 119 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய மும்பை, திங்கள்கிழமை முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் சோ்த்திருந்தது. முஷீா் கான் 51, கேப்டன் அஜிங்க்ய ரஹானே 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

பிருத்வி ஷா 11, பூபேன் லால்வனி 18 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவா்களை யஷ் தாக்குா், ஹா்ஷ் துபே சாய்த்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com