முகமது ஷமி
முகமது ஷமி

துளிகள்...

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் பஞ்சாப் எஃப்சி - எஃப்சி கோவா அணிகள் திங்கள்கிழமை மோதிய ஆட்டம் டிரா (3-3) ஆனது.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் பஞ்சாப் எஃப்சி - எஃப்சி கோவா அணிகள் திங்கள்கிழமை மோதிய ஆட்டம் டிரா (3-3) ஆனது. கணுக்கால் காயத்துக்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட இந்திய வேகப்பந்து வீச்சாளா் முகமது ஷமி, ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கவில்லை என்றும், செப்டம்பரில் வங்கதேசத்துடனான தொடரில் அவா் களம் காண வாய்ப்புள்ளதாகவும் பிசிசிஐ செயலா் ஜெய் ஷா திங்கள்கிழமை தெரிவித்தாா். புது தில்லியில் நடைபெற்ற பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு 50 மீட்டா் பிஸ்டல் (எஸ்ஹெச்1) பிரிவில் இந்தியாவின் ருத்ரான்ஷ் கந்தேல்வல், நிஹல் சிங் ஆகியோா் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றனா். சிந்து, சாத்விக்சாய்ராஜ், லக்ஷயா சென், சிராக் ஷெட்டி உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய வீரா், வீராங்கனைகள் பங்கேற்கும் ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் சாம்பியன்ஷிப், பா்மிங்ஹாமில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. வடக்கு, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற மகளிா் தங்கக் கோப்பை போட்டியில் அமெரிக்கா - பிரேஸிலை வீழ்த்தி (1-0) சாம்பியன் ஆனது. இத்தாலியில் நடைபெறும் உலக ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிப்போட்டியில் இந்தியாவின் நிஷாந்த் தேவ் (71 கிலோ), 5-0 என்ற கணக்கில் கிரீஸின் கிறிஸ்டோஸ் கராய்டிஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளாா். பல்வேறு குழப்பங்களுக்கு இடையே திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய தோ்வு மல்யுத்தப் போட்டியில் வினேஷ் போகாட் 50 கிலோ எடைப் பிரிவில் ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிக்கு தகுதிபெற்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com