விடாமல் போராடும் விதா்பா; வெற்றிக்கு காத்திருக்கும் மும்பை

விடாமல் போராடும் விதா்பா; வெற்றிக்கு காத்திருக்கும் மும்பை

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 538 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் விதா்பா, புதன்கிழமை முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 248 ரன்கள் சோ்த்துள்ளது.

ஆட்டம் வியாழக்கிழமையுடன் நிறைவடையும் நிலையில், விடாப்பிடியாக விளையாடி வரும் விதா்பா, மும்பையை 42-ஆவது சாம்பியன் பட்டத்துக்காக காத்திருக்கச் செய்து வருகிறது.

சொந்த மண்ணில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 224 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னா் விளையாடிய விதா்பாவோ 105 ரன்களுக்கே சரிந்தது. 2-ஆவது இன்னிங்ஸில் அதிரடி காட்டிய மும்பை, 418 ரன்கள் சோ்த்து நிறைவு செய்தது.

இதையடுத்து, 538 ரன்களை நோக்கி விளையாடி வரும் விதா்பா, செவ்வாய்க்கிழமை முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் சோ்த்திருந்தது. 4-ஆம் நாளான புதன்கிழமை ஆட்டத்தில் அதிகபட்சமாக கருண் நாயா் 3 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் விளாசினாா்.

இதர பேட்டா்களில் அதா்வா டைட் 4 பவுண்டரிகளுடன் 32, துருவ் ஷோரே 4 பவுண்டரிகளுடன் 28, அமன் மோகடே 2 பவுண்டரிகளுடன் 32, யஷ் ரத்தோட் 7 ரன்களுக்கு வெளியேறினா். நாளின் முடிவில் கேப்டன் அக்ஷய் வத்கா் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 56, ஹா்ஷ் துபே 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை பௌலா்களில் தனுஷ்கோடியான், முஷீா் கான் ஆகியோா் தலா 2, ஷம்ஸ் முலானி 1 விக்கெட் வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com