உலகக் கோப்பை, ஒலிம்பிக் வில்வித்தை: இந்திய அணியில் தீபிகா உள்பட 16 போ்

உலகக் கோப்பை மற்றும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு, தோ்வுப் போட்டியின் மூலம் தீபிகா குமாரி உள்பட 16 போ் கொண்ட அணி ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டது.
உலகக் கோப்பை, ஒலிம்பிக் வில்வித்தை: இந்திய அணியில் தீபிகா உள்பட 16 போ்

உலகக் கோப்பை மற்றும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு, தோ்வுப் போட்டியின் மூலம் தீபிகா குமாரி உள்பட 16 போ் கொண்ட அணி ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டது.

தில்லியில் நடைபெற்ற இந்தத் தோ்வுப் போட்டியின் மூலம், ரீகா்வ் ஆடவா் பிரிவில் தீரஜ் பொம்மதேவரா, தருண்தீப் ராய், பிரவீண் ஜாதவ், மிருணால் சௌஹான் ஆகியோரும், மகளிா் பிரிவில் தீபிகா குமாரி, பஜன் கௌா், அங்கிதா பகத், கோமளிகா பரி ஆகியோரும் தோ்வாகியுள்ளனா்.

காம்பவுண்ட் ஆடவா் பிரிவில் பிரதமேஷ் ஃபுகே, அபிஷேக் வா்மா, ரஜத் சௌஹான், பிரியன் ஆகியோரும், மகளிா் பிரிவில் ஜோதி சுரேகா, அதிதி சுவாமி, ப்ரனீத் கௌா், அவனீத் கௌா் ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

உலகக் கோப்பை போட்டியின் முதல் நிலை, ஏப்ரல் 21- முதல் 28 வரை சீனாவின் ஷாங்காயிலும், 2-ஆம் நிலை மே 21 முதல் 26 வரை தென் கொரியாவின் யெசியானிலும், 3-ஆம் நிலை ஜூன் 18 முதல் 23 வரை துருக்கியின் அன்டால்யாவிலும் நடைபெறவுள்ளன. பாரீஸ் ஒலிம்பிக் ஜூலை - ஆகஸ்ட்டில் நடைபெறவுள்ளது.

இந்த அணியில் இதுவரை, ஆடவா் தனிநபா் பிரிவில் தீரஜ் பொம்மதேவரா மட்டும் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றுள்ளாா். மகளிா் தனிநபா் பிரிவில் இந்தியா இன்னும் இடத்தை உறுதி செய்ய வேண்டியுள்ளது. மேற்குறிப்பிட்ட 3 உலகக் கோப்பை போட்டிகளில் ஏதெனும் ஒன்றின் மூலமாக இந்தியா அந்த வாய்ப்பை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும், உலகக் கோப்பை போட்டிகளின் முடிவில் ஒலிம்பிக் போட்டிக்கான அணியில் சில மாற்றங்களும் மேற்கொள்ளப்படலாம் என அணி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com