2-ஆவது சுற்றில் லக்ஷயா சென், ஸ்ரீகாந்த்

2-ஆவது சுற்றில் லக்ஷயா சென், ஸ்ரீகாந்த்

பேசல்: சுவிட்ஸர்லாந்தில் நடைபெறும் ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், கே.ஸ்ரீகாந்த் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் லக்ஷயா சென் 21-19, 15-21, 21-11 என்ற கேம்களில் மலேசியாவின் லியோங் ஜுன் ஹாவை வீழ்த்தினார். ஸ்ரீகாந்த் 21-17, 21-18 என்ற கேம்களில் சீன தைபேவின் வாங் ஸý வெய்யை வீழ்த்தி அசத்தினார்.

மகளிர் இரட்டையர் பிரிவில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் தனிஷா கிராஸ்டோ/அஸ்வினி பொன்னப்பா கூட்டணி 21-18, 12-21, 21-19 என்ற கேம்களில் இந்தோனேசியாவின் மெய்லிசா டிரியஸ்/ரேச்சல் அலிசா ரோஸ் இணையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு வந்தது. அதேபோல், பிரியா கொன்ஜெங்பம்/ஸ்ருதி மிஸ்ரா ஜோடி 21-13, 21-19 என்ற கணக்கில் சீன தைபேவின் ஹுவாங் யு சன்/லியங் டிங் யு இணையை சாய்த்தது.

எனினும் ருதுபர்னா பாண்டா/ஸ்வேதாபர்னா பாண்டா இணை 4-21, 6-21 என இந்தோனேசியாவின் அப்ரியனி ரஹயு/சிட்டி ஃபாடியா சில்வா கூட்டணியிடம் தோற்றது.

சிம்ரன் சிங்கி/ரிதிகா தாக்கர் ஜோடியும் 17-21, 7-21 என இந்தோனேசியாவின் லானி டிரியா மயாசரி/ரிப்கா சுகியார்டோ ஜோடியிடம் வீழ்ந்தது. அஸ்வினி பாட்/ஷிகா கெளதம் இணையும் 13-21, 21-16, 14-21 என்ற கணக்கில் ஹாங்காங்கின் யுங் கா டிங்/யுங் புல் லாம் கூட்டணியிடம் தோற்றது.

ஆடவர் இரட்டையரில் ஹரிஹரன்/ரூபன் குமார் இணை 19-21, 14-21 என்ற கேம்களில் ஜப்பானின் கென்யா மிட்சுஹஷி/ஹிரோகி ஒகாமுரா கூட்டணியிடம் தோல்வி கண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com