பாகிஸ்தான் மகளிரணி முன்னாள் கேப்டன் ஓய்வு!

பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் மகளிரணி கேப்டன் ஜவீரியா கான் ஓய்வை அறிவித்துள்ளார்.
 ஜவீரியா கான்
ஜவீரியா கான்படம்: ஜவீரியா கான்/ எக்ஸ்

பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் மகளிரணி கேப்டன் ஜவீரியா கான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வை அறிவித்துள்ளார்.

35 வயதான ஜவீரியா கான் பாகிஸ்தான் அணிக்காக 228 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 4903 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 2சதங்கள், 25 அரை சதங்கள் அடங்கும். பேட்டிங் மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் பௌலிங்கும் வீசும் திறனுடையவர். சுழல் பந்து வீச்சாளரனா ஜவீரியா கான் 28 விகெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 ஜவீரியா கான்
தோனிக்காக ‘நீ சிங்கம்தான்’ பாடல் பாடுகிறேன்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு!

பாகிஸ்தானுக்காக வெள்ளை நிறப் பந்து போட்டிகளில் அதிகபட்ச ரன்கள் எடுத்த 2வது வீராங்கனையாக ஜவீரியா கான் திகழ்கிறார். ஒருநாள், டி20 என ஒவ்வொரு விதமான போட்டியிலும் 2000 ரன்களை கடந்துள்ளார்.

2008ஆம் ஆண்டு அறிமுகமான ஜவீரியா கான் 2009, 2013, 2017, 2022 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற 50 ஓவர் மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளிலும் அனைத்து டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும் பங்கேற்று அசத்தியுள்ளார்.

 ஜவீரியா கான்
சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட் விலை குறைப்பு!

சர்வதேச கிர்க்கெட்டில் ஓய்வு பெற்றாலும் லீக் போட்டிகளில் பங்கேற்பேன் எனக் கூறியுள்ளார் . மேலும் தனக்கு ஆதரவு அளித்த நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், அணியினர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். சரவதேச அளவில் பாகிஸ்தான் கொடியை பிடித்ததில் பெருமை கொள்கிறேன் எனவும் உறுக்கமாக பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com