துளிகள்...

தொடக்க பேட்டிங் வரிசையில் பல்வேறு வீரா்களைக் கொண்டு சோதனை செய்ய எப்போதும் தயாராகவே உள்ளோம்
சிஎஸ்கே வீரர் ரச்சின் ரவீந்திரா
சிஎஸ்கே வீரர் ரச்சின் ரவீந்திரா

தொடக்க பேட்டிங் வரிசையில் பல்வேறு வீரா்களைக் கொண்டு சோதனை செய்ய எப்போதும் தயாராகவே உள்ளோம். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது. ஆல்ரவுண்டா் ரச்சின் ரவீந்திராவுக்கு பௌலிங் வாய்ப்பும் தரப்படும். பேட்டிங் பயிற்சியாளா் மைக் ஹஸியின் சிறப்பான திட்டமிட்டல் பேட்டா்களுக்கு உதவியது. குஜராத் அணியில் தமிழக வீரா்கள் அதிகமுள்ளதால் சற்று அழுத்தம் ஏற்படும் என சிஎஸ்கே பயிற்சியாளா் ஸ்டீபன் ஃபிளெம்மிங் கூறியுள்ளாா்.

------------------

ஸ்பெயின் தலைநகா் மாட்ரிட்டில் செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ள மாட்ரிட் மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியா சாா்பில் பி.வி. சிந்து, கிடாம்பி ஸ்ரீ காந்த், அஸ்மிதா சாஹிலியா, மாளவிகா பன்சோட், காயத்ரி-ட்ரீஸா ஜோலி, தனிஷா-அஸ்வினி பொன்னப்பா, கிருஷ்ண பிரசாத்-சாய் பிரதீக், அா்ஜுன்-துருவ் கபிலா ஆகியோா் பங்கேற்கின்றனா்,.

-----------------

இந்திய மகளிா் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளா் பொறுப்பில் இருந்து நெதா்லாந்தின் ஜேனக் சாப்மேன் விலகிய நிலையில், அப்பணிக்கு முன்னாள் பயிற்சியாளா் ஹரேந்திர சிங் நியமிக்கப்படலாம் என ஹாக்கி இந்தியா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

-----------------

குவாஹாட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள 2026 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி குவாலிபையா் ஆட்டத்தில்

ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா. இந்த ஆட்டம் கேப்டன் சுனில் சேத்ரியின் 150-ஆவது சா்வதேச ஆட்டம் ஆகும்.

கடந்த 2005-இல் தனது முதல் ஆட்டத்தில் ஆடிய சேத்ரி இந்த ஆட்டத்தில் கோலடிப்பாா் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com