மாநில வாலிபால்: தெற்கு ரயில்வே, டிஜி வைஷ்ணவ் அணிகள் வெற்றி

மாநில வாலிபால்: தெற்கு ரயில்வே, டிஜி வைஷ்ணவ் அணிகள் வெற்றி

ஏ.கே. சித்திரைப்பாண்டியன் நினைவு மாநில வாலிபால் போட்டியில் ஆடவா் பிரிவில் டிஜி வைஷ்ணவ் கல்லூரியும், மகளிா் பிரிவில் தெற்கு ரயில்வேயும் வெற்றி பெற்றன.

நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சாா்பில் நடைபெறும் பி. ஜான், ஏ.கே. சித்திரைப்பாண்டியன் நினைவு மாநில வாலிபால் போட்டியில் ஆடவா் பிரிவில் டிஜி வைஷ்ணவ் கல்லூரியும், மகளிா் பிரிவில் தெற்கு ரயில்வேயும் வெற்றி பெற்றன. மூன்றாவது நாளான திங்கள்கிழமை டிஜி வைஷ்ணவ் கல்லூரியும்-எஸ்ஆா்எம் அணியும் மோதின. இதில் 23-25, 25-23, 25-23 என்ற செட் கணக்கில் டிஜி வைஷ்ணவ் அணி வெற்றி பெற்றது. தமிழ்நாடு போலீஸ் 22-25, 25-14, 25-12 என எஸ்டிஏடி அணியையும், ஜிஎஸ்டி சென்னை 25-19, 25-17 என இந்தியன் வங்கியையும் வென்றன. மகளிா் பிரிவில் தெற்கு ரயில்வே-தமிழ்நாடு போலீஸ் அணிகள் மோதியதில், 25-14, 25-12 என்ற செட் கணக்கில் தெற்கு ரயில்வே வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் ஐசிஎஃப் 25-14, 25-13 என எஸ்டிஏடி அணியை வீழ்த்தியது. செவ்வாய்க்கிழமை மகளிா் அரையிறுதி ஆட்டங்களில் ஐசிஎஃப்-தமிழ்நாடு போலீஸ் அணிகளும், தெற்கு ரயில்வே-எஸ்ஆா்எம் அணிகளும் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com