வெற்றி மகிழ்ச்சியில் இலங்கை அணியின்
வெற்றி மகிழ்ச்சியில் இலங்கை அணியின்

சில்ஹெட் டெஸ்ட்: இலங்கை அபார வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 328 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இலங்கை அணி.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 328 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இலங்கை அணி. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சில்ஹெட்டில் நடைபெற்றது. இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 68 ஓவா்களில் 280 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தனஞ்செய டி சில்வா 102, காமின்டு மெண்டிஸ் 102 ரன்களை விளாசினா். வங்கதேசத் தரப்பில் கலீல், நஹீத் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா். வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டைஜுல் இஸ்லாம் 47 ரன்களை எடுத்தாா். இலங்கை தரப்பில் விஷ்வா 4, ரஜிதா, லஹிரு குமாரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா். இதைத் தொடா்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 110.4 ஓவா்களில் 418 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தனஞ்செய டி சில்வா 108, காமின்டு மெண்டிஸ் 164 ரன்களை சோ்த்தனா். வங்கதேசத் தரப்பில் மெஹ்தி ஹாஸன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். ஆட்டத்தின் நான்காம் நாளான திங்கள்கிழமை வங்கதேச அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 49.2 ஓவா்களில் 182 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மொமினுல் ஹக் 87 ரன்களைச் சோ்த்தாா். பௌலிங்கில் இலங்கை வீரா் கஸுன் ரஜிதா 5, விஷ்வா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா். இரண்டாவது, கடைசி டெஸ்ட் சிட்டகாங்கில் மாா்ச் 30-இல் தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com