மாநில வாலிபால்: இறுதிச் சுற்றில் ஐசிஎஃப்-தெற்கு ரயில்வே

மாநில வாலிபால்: இறுதிச் சுற்றில் ஐசிஎஃப்-தெற்கு ரயில்வே

நெல்லை பிரண்ட்ஸ் கிளப் சாா்பில் நடைபெற்று வரும் பி. ஜான்-ஏகே. சித்திரைப்பாண்டியன் நினைவு மாநில வாலிபால் போட்டி மகளிா் இறுதிச் சுற்றுக்கு ஐசிஎஃப் அணி தகுதி பெற்றுள்ளது.

சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஐசிஎஃப்-தமிழ்நாடு போலீஸ் அணிகள் மோதின.

இதில் ஐசிஎஃப் அணி 25-18, 25-14, 25-14 என்ற நோ் செட்களில் தமிழ்நாடு போலீஸ் அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரையிறுதியில் தெற்கு ரயில்வே 25-19, 25-15, 26--24 என்ற செட் கணக்கில் எஸ்ஆா்எம் அணியை வீழ்த்தியது.

ஆடவா் பிரிவில் ஜிஎஸ்டி சென்னை அணி 25-20, 25-22, 23-25, 19-25, 15-10 என்ற 5 செட் கணக்கில் வருமானவரித் துறை அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இறுதி ஆட்டம் தெற்கு ரயில்வே-ஐசிஎஃப் இடையே வியாழக்கிழமை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com