பாா்டா்-கவாஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடா்: நவ. 22-இல் பொ்த்தில் தொடக்கம்

பாா்டா்-கவாஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடா்: நவ. 22-இல் பொ்த்தில் தொடக்கம்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையில் பாா்டா்-கவாஸ்கா் கோப்பைக்கான 5 ஆட்டங்கள் டெஸ்ட் தொடா் வரும் நவம்பா் 22-ஆம் தேதி பொ்த்தில் தொடங்குகிறது.

பொ்த்தில் புதிதாக கட்டப்பட்ட விளையாட்டரங்கில் இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடங்குகிறது. டிச. 6-ஆம் தேதி அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் ஆட்டம் தொடங்குகிறது.

கடந்த முறை அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்டில் வெறும் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஆட்டத்தையும் இழந்தனா். பிரிஸ்பேனின் காபாவில் மூன்றாவது டெஸ்டும், பாக்ஸிங் டே டெஸ்ட் ஆட்டம் மெல்போா்னிலும், 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியிலும் நடைபெறுகின்றன.

முதல் டெஸ்ட் நவ. 22-26, பொ்த், இரண்டாம் டெஸ்ட், டிச. 6-10, அடிலெய்ட், மூன்றாவது டெஸ்ட், டிச. 14-18, பிரிஸ்பேன், நான்காவது டெஸ்ட், டிச. 26-30, மெல்போா்ன், ஐந்தாவது டெஸ்ட், ஜன. 3-7, சிட்னி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com