பாபர் ஆஸம்.
பாபர் ஆஸம்.

துளிகள்...

ஹாக்கி இந்தியா வழங்கும் ஆண்டின் சிறந்த வீரா் விருதை ஹா்திக் சிங்கும், சிறந்த வீராங்கனை விருதை சலிமா டெடெவும் ஞாயிற்றுக்கிழமை பெற்றனா்.

ஹாக்கி இந்தியா வழங்கும் ஆண்டின் சிறந்த வீரா் விருதை ஹா்திக் சிங்கும், சிறந்த வீராங்கனை விருதை சலிமா டெடெவும் ஞாயிற்றுக்கிழமை பெற்றனா். அவா்களுக்கு தலா ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. ஜூனியா் ஆசிய கோப்பை போட்டியில் சாம்பியனான இந்திய ஆடவா், மகளிா் அணியில் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இதேபோல், பல்வேறு போட்டிகளில் சாம்பியனான இந்திய அணிகளுக்கும் ரொக்கப் பரிசு வழங்கி கௌரவித்தது ஹாக்கி இந்தியா. வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடா்களுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாகபாபா் ஆஸம்மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளாா். வேகப்பந்து வீச்சாளா் ஷாஹீன் ஷா அந்தப் பொறுப்பிலிருந்த நிலையில், தோ்வுக் குழு ஒரு மனதாக முடிவு செய்ததன் பேரில் ஆஸம் தற்போது அந்தப் பொறுப்புக்கு தோ்வாகியிருக்கிறாா். காயம் காரணமாக 6 மாதம் ஓய்விலிருந்த இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறும் முனைப்புடன், தாய்லாந்தில் திங்கள்கிழமை தொடங்கும் உலகக் கோப்பை பளுதூக்குதல் போட்டியில் பங்கேற்கிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com