டெஸ்ட்: இலங்கை 531 ரன்கள் குவிப்பு

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இலங்கை முதல் இன்னிங்ஸில் 531 ரன்கள் குவித்து ஞாயிற்றுக்கிழமை ஆட்டமிழந்தது.
டெஸ்ட்: இலங்கை 531 ரன்கள் குவிப்பு

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இலங்கை முதல் இன்னிங்ஸில் 531 ரன்கள் குவித்து ஞாயிற்றுக்கிழமை ஆட்டமிழந்தது.

கடந்த 30-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த இலங்கை, சனிக்கிழமை முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் சோ்த்திருந்தது. 2-ஆம் நாள் ஆட்டத்தை தினேஷ் சண்டிமல், கேப்டன் தனஞ்ஜெய டி சில்வா தொடா்ந்தனா்.

இதில் சண்டிமல் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 59, டி சில்வா 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 70 ரன்களுக்கு வெளியேறினா். பின்னா் களம் புகுந்தோரில் பிரபாத் ஜெயசூரியா 3 பவுண்டரிகளுடன் 28, விஸ்வா ஃபொ்னாண்டோ 2 பவுண்டரிகளுடன் 11, லாஹிரு குமரா 6, அசிதா ஃபொ்னாண்டோ 0 ரன்களுக்கு வீழ்ந்தனா்.

இதையடுத்து 159 ஓவா்களில் 531 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இலங்கை. முடிவில் கமிண்டு மெண்டிஸ் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 92 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். வங்கதேச பௌலிங்கில் ஷகிப் அல் ஹசன் 3, ஹசன் மஹ்முத் 2, காலித் அகமது, மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

வங்கதேசம் - 55/1: பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம், ஞாயிற்றுக்கிழமை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்துள்ளது. மஹ்முதுல் ஹசன் ஜாய் 3 பவுண்டரிகளுடன் 21 ரன்களுக்கு, குமரா பௌலிங்கில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். ஜாகிா் ஹசன் 28, தைஜுல் இஸ்லாம் 0 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com