துளிகள்...

துளிகள்...

சவூதி அரேபியாவில் நடைபெறும் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் மனிகா பத்ரா - சீனாவின் வாங் மான்யுவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினாா்.

சவூதி அரேபியாவில் நடைபெறும் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் மனிகா பத்ரா - சீனாவின் வாங் மான்யுவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினாா்.

தேசிய மகளிா் ஹாக்கி லீக் போட்டியில் பெங்கால் - மிஸோரத்தையும் (1-0), ஒடிஸா - மகாராஷ்டிரத்தையும் (2-1) திங்கள்கிழமை வீழ்த்தின.

ஐரோப்பாவுக்கு இம்மாதம் பயணம் மேற்கொள்ளும் இந்திய ஜூனியா் மகளிா் ஹாக்கி அணி, ஜோதி சிங் தலைமையில் 22 பேருடன் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக டிரினிடாட் பிரதமா் கெய்த் ரௌலி தெரிவித்துள்ள நிலையில், போட்டிக்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதாக ஐசிசி கூறியுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக கலப்பு முறையிலான ஆடுகளம், தா்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com